மானுட உளவியலும் இந்திய அரசியலும்

மானுட உளவியலும் இந்திய அரசியலும்

By Iyyankannu · Tamil

மனித மனமும் அரசியலும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புகொள்கின்றன என்பதை ஆராயும் சிந்தனையைத் தூண்டும் நூல். தேர்தல் உளவியல், தலைமைத்துவம், உணர்ச்சி அரசியல், ஊடகங்களின் தாக்கம், இளைஞர்களின் அரசியல் சிந்தனை, செயற்கை நுண்ணறிவு (AI), Deepfake மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலச் சவால்கள் என இந்திய அரசியலின் பல்வேறு பரிமாணங்களை எளிய தமிழில் விளக்குகிறது. அரசியலை மட்டுமல்ல, அரசியலுக்குப் பின்னால் இயங்கும் மனித மனத்தையும் புரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல். மானுட உளவியலும் இந்திய அரசியலும் explores the relationship between human psychology and political behaviour in India. Covering election psychology, leadership, emotional politics, media influence, youth political thinking, Artificial Intelligence (AI), Deepfakes, and the future challenges of democracy, this book presents complex political and psychological concepts in an accessible manner. An insightful read for students, young readers, and anyone interested in understanding the human mind behind political decisions and democratic participation.

₹279 · In stock

Reader reviews

4.7 out of 5 · 3 approved reviews

Siva Subramanian · 5/5

External review received via email

ஆகா! ஒரு கோப்பை நிறைய அரசியல் தேநீர் பருகியதுபோல் உணர்கிறேன்... மிகவும் அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய, சிறந்த அரசியல் அனுபவம் பெற அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம். ஒரு நல்ல ஜனநாயகம் உருவாக சிறந்த தலைவர்களை விட அவர்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் மிகவும் தெளிவானவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர வைத்த சிறந்த புத்தகம்... நன்றி மு. ஐயங்கண்ணு சார்... சிவா சுப்பிரமணியன் கடம்பன்குளம் 17-10-2026

P.திருமலைக்குமார் · 4/5

External review received via email

மதிப்பிற்குரிய ஆசிரியர் மு. ஐயங்கண்ணு அவர்களுக்கு, வணக்கம். தங்களின் ‘மானுட உளவியலும் இந்திய அரசியலும்’ நூலை வாசித்தேன். மிகவும் ஆழமான, தற்காலச் சூழலுக்கு மிக அவசியமான ஒரு கருத்துப்பொருளைக் கையில் எடுத்து நேர்த்தியாகப் படைத்துள்ளீர்கள். நூலின் சிறப்பம்சங்கள்: - அரசியலை வெறும் தேர்தல் முடிவுகளாகவோ, கட்சி விவகாரங்களாகவோ பார்க்காமல், மனித மனதின் ஆழமான உளவியல் காரணிகளோடு (Need for Control, Striving for Superiority, அதிகாரத் தேவை) இணைத்துப் பேசிருப்பது பாராட்டுக்குரியது. - மாஸ்லோ, ஆபிரகாம் மாஸ்லோ, ஆல்பிரட் அட்லர், டேவிட் மெக்கல்லேண்ட் போன்ற அறிஞர்களின் கோட்பாடுகளை இந்திய-தமிழக அரசியலின் கள யதார்த்தத்தோடு பொருத்தி விளக்கிய விதம் சிறப்பு. - ‘அரசியல் உளவியலின் அடித்தளங்கள்’ தொடங்கி ‘எதிர்கால ஜனநாயகத்தின் சவால்கள்’ வரை 17 அத்தியாயங்களின் வழியே வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் விதம் சீராக உள்ளது. - கடினமான உளவியல் தத்துவங்களையும் அரசியல் நுணுக்கங்களையும் எளிய, தெளிவான தமிழ் நடையில் வாசகர்களுக்குக் கடத்தியுள்ளீர்கள். மேம்படுத்துவதற்கான சிறு ஆலோசனைகள்: - அடுத்த பதிப்புகளில், கோட்பாடுகளை விளக்கும்போது சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அரசியல் தருணங்களை (Case Studies) இன்னும் விரிவாகப் பகுத்தறிந்தால் ஆய்வு மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் வாசிப்பு அனுபவம் மேலும் சுவாரஸ்யமாகும். - உணர்ச்சி அரசியல் மற்றும் பொய்ப்பிரசாரங்களால் பாதிக்கப்படும் வாக்காளர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதற்கான உளவியல் வழிகாட்டுதல்களைச் சுருக்கமாகச் சேர்க்கலாம். தொழில்நுட்பத் துறையிலிருந்து வந்து, சமூக விழிப்புணர்வை முன்னணியாகக் கொண்டு இத்தகைய சமூக விழிப்புணர்வுக்கான நூலைத் தந்துள்ள தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! திருமலைக்குமார் தலைமை ஆசிரியர் அரசு நடுநிலைப் பள்ளி, தென்காசி

Dr.K.Manikandan · 5/5

External review received via email

மனித உளவியல் உண்மைகளை இந்திய அரசியலுடன் சமூகப் பொருத்தி, அறிவியல் ஆதாரத்துடன் எழுதப்பட்டுள்ள “மானுட உளவியலும் இந்திய அரசியலும்” என்னும் இந்த நூல் மாணவர்கள், இளைஞர்கள், சாதாரண மக்கள் மற்றும் தலைவர்கள் என இந்தியச் சமூகத்தில் உள்ள அனைவரும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான படைப்பாகும். தெளிவான எழுத்து நடை, செறிவான கருத்துக்கள், உகந்த எடுத்துக்காட்டுகள், ஆய்வுச் சான்றுகள் மற்றும் தரவுகள் துணையுடன், மனிதர்களின் அன்றாட நடத்தைகளையும் அவற்றின் பின்னணியில் இயங்கும் உளவியல் கூறுகளையும் அரசியலோடு தொடர்புபடுத்தி, அவை எவ்வாறு அரசியல் தாக்கங்களை உருவாக்குகின்றன என்பதை எளிதாக எடுத்துரைப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். அரசியல் தலைவர்கள் மக்களின் உளவியலை எவ்வாறு புரிந்துகொண்டு, அவர்களைக் கவர்ந்து, எவ்வாறு வாக்குகளைக் கவருகின்றனர் என்பதை விளக்கும் ஆசிரியர், அதேவேளையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் மக்கள் தங்கள் விழிப்புணர்வுடன் கூடிய உணர்வுகளையும் தரவுகளையும் ஆராய்ந்து, சுயசிந்தனையோடு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆழமாக வலியுறுத்துகிறார். எண்ணிம மற்றும் மின்னணு ஊடகங்கள் தொடுத்து வழங்கும் மிகைத் தகவல்களால் மக்கள் எவ்வாறு அமைப்படைக்கப்படுகின்றனர் என்பதைத் தெளிவாகக் கண் முன் காட்டுவதுடன், விட்டுவிடாமல் அதனால் ஜனநாயகத்திற்கு ஏற்படும் சவால்களையும், ஆளுத்தந்திரங்களையும், ஆட்சித்தந்திரங்களையும் மக்களுக்கு தெளிவாக விளக்கிப்படுத்துவது அவருடைய சமூகப் பொறுப்பினைக் காட்டுகின்றது. எனினும், முதன்முறை எழுத்தாளர்களிடம் இயல்பாகக் காணப்படும் ஒரே கருத்தை வெவ்வேறு அத்தியாயங்களில் மீண்டும் மீண்டும் பதிவு செய்யும் தன்மையை ஆசிரியர் சற்றுத் தவிர்த்திருக்கலாம். வேகமாக மாறிவரும் காலகட்டத்தில், மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளில், அரசியல் களங்களில் இளைஞர்களும் பொதுமக்களும் தங்களது உளவியலைப் புரிந்துகொண்டு, பகுத்தறிவுடன் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்நூலைப் படைத்துள்ள எழுத்தாளருக்கு எனது பாராட்டுகள். அவருடைய எழுத்துப்பணி வரும் காலங்களில் மென்மேலும் சிறக்க, எழுத்தாளராக மனதார வாழ்த்துகிறேன். முனைவர் க. மணிகண்டன் (பேராசிரியர், எழுத்தாளர், இயற்கை ஆர்வலர்) மண்ணியல் துறை வ.உ. சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கிள்ளிக்குளம்.

Browse more books